பளை பிரதேசத்தில் அமைந்துள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம் வடக்கு மாகாண சபைக்கு வழங்கும் சமூக வலுவூட்டல் நன்கொடை நிதி 17மில்லியன் ரூபாவும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை நிதி 12 மில்லியன் ரூபாவுமாக 29 மில்லியன் ரூபா செலவில் பளை நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஆயுள்வேத வைத்தியசாலை இன்று(13) திறந்து வைக்கப்பட்டது.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சுதர்சன், கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சத்தியராகவன், பளை புனித அந்திரேயா ஆலய பங்குத்தந்தை வரதராஜன் மற்றும் பச்சிலைப் பள்ளி பிரதேச செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

