அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு “பிரஜா சக்தி” அபிவிருத்தி நடவடிக்கைகளைத் திட்டமிடுதல் மற்றும் முன்னெடுத்தல் போன்ற கிராமத்தின் அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களிலும் அம்பாறை மாவட்ட சமூக மேம்பாட்டு தேசிய இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வு (சிங்கள மொழி /தமிழ் மொழி) அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் கேட்போர் கூடத்திலும், தமிழ் மொழியில் தென்கிழக்குப் பல்கலைக்கழக கேட்போர் கூடத்திலும் நேற்று (12) நடைபெற்றது.
இந்நிகழ்வில், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே மற்றும் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

