மகா சிவராத்திரியை முன்னிட்டு பாரதத்தின் பழமை வாய்ந்த ஜோதிலிங்க தரிசன வழிபாடு

மகா சிவராத்திரி முன்னிட்டு இன்று(15) கிழக்கு மாகாணத்தில் பல்வேறு சிவ வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

 

இதே வேளை மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் ராஜ யோக நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 12 ஜோதி லிங்க தரிசன வழிபாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

 

இதன்போது டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணம் சேர்க்கும் சமூகப் பணி முன்னெடுக்கப்பட்டதுடன் சிவராத்திரி வழிபாடுகளை முன்னிட்டு பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

 

சிவராத்திரியின் மகிமை பொதுமக்களின் மனக்குறையைத் தீர்க்கும் மகா யாகம் கொண்ட நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டதுடன் சிவலிங்க வழிபாடுகளும் இங்கு முன்னெடுக்கப்பட்டன.

 

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இடம்பெற்ற ஜோதிலிங்க தரிசன நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் அருளைப் பெற்றுச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *