மாற்றுத் திறனாளிகளின் தேசிய கொள்கைப் புதுப்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் பிரணவன் மேற்பார்வையின் கீழ் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சந்திரகலா கோணேஸ்வரன் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளி அமைப்புக்களின் ஐக்கிய முன்னனி செயலாளர் பிரசன்ன குருப்புவின் பங்குபற்றுதலுடன் புதிய மாவட்ட செயலகத்தில் நேற்று (17) இடம்பெற்றது.
சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் செயற்படும் மாற்றுத்திறனாளிகள் தேசிய கவுன்சில் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் ஐக்கிய முன்னணி ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கொள்கையில் உள்வாங்கப்பட வேண்டிய பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந் நிகழ்வில் மாற்றுத்திறனாளி அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவன உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

