கொட்டும் மழையிலும் சாதாரண தர பரீட்சைக்கு உற்சாகத்துடன் தோற்றிய மாணவர்கள்

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை நேற்று(17) முதல் ஆரம்பமாகிய நிலையில் காலை மாணவர்களை தமது பெற்றோர்கள் உற்சாகத்துடன், அழைத்து வந்தனர்.

மழையுன் கூடிய கால நிலை காணப்பட்ட போதிலும், பாடசாலை பரீட்சார்த்திகளும், தனியார் பரீட்சாத்திகளும் மழையினை பொருட்படுத்தாமல் உற்சாகத்துடன் வருகை தந்தனர்.

அதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 கல்வி வலயங்களிலும் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டு நேற்று பரீட்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *