காத்தான்குடியிலிருந்து சென்ற பேரூந்து புனானையில் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இன்று(18) காலை மட்டக்களப்பு வாழைச்சேனை புனானை பகுதியில் இவ் விபத்து பதிவாகியுள்ளது.
மட்டு பொலன்னறுவை வீதியில் காத்தான்குடியிலிருந்து பொலன்னறுவை நோக்கிப் பயணித்த பேரூந்தும் பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த லொறியும் புனானை பகுதில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் இரு வாகனங்களும் சேதமடைந்துள்ள நிலையில் எவருக்கும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்படுகிறது.

