திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம், கந்தளாய் மற்றும் கோமரன்கடவெல பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 1- 24 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ பரிசோதனை நேற்று முன்தினம்(17) நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர் பிரணவன் உரையாற்றும்போது மாற்றுத்திறனாளிகளை பகல் நேர பராமரிப்பு நிலையத்திற்கு பொருத்தமான மாற்றுத்திறனாளிகளை இனங்காண்பது மற்றும் அவர்களுக்குரிய உபகரணங்களை சரியான முறையில் வழங்குவது தொடர்பாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் ஒத்தபற்றிக் மற்றும் பிசியோதெரபி வைத்திய ஆலோசகர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறுபட்ட சிகிச்சைகளை அளித்தனர். சிகிச்சையின் பின்னர் எவ்வாறான உபகரணங்கள் இவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் அமைக்கப்பட உள்ள திறன் அபிவிருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையத்திற்கு பொருத்தமான மாற்றுத்திறனாளிகளும் இனங்காணப்பட்டனர்.
இந்நிகழ்வு சிறுவர் அபிவிருத்தி நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

