மட்டக்களப்பில் கனமழையினால் 409 குடும்பங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பிரதேச செயலகப்பிரிவுகளில் 409 குடும்பங்களைச் சேர்ந்த 1310 நபர்கள் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கன மழையினால் ஐந்து பிரதேச செயலாகப்பிரிவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவினில் 271 குடும்பங்களும், எறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 103 குடும்பங்களும், கோறளைப் பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 21 குடும்பங்களும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் 13 குடும்பங்களும், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு குடும்பமும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *