சுற்றாடல் அமைச்சின் காலநிலை மாற்றம் ஒழுங்குபடுத்தலின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச திணைக்களங்கள் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், மாநகர சபை நகரசபை, பிரதேச சபை அனைத்து திணைக்களங்களின் விடயம் சார் உத்தியோகத்தர்களுக்கான பசுமை பெறுகை விழிப்புணர்வு தொடர்பான ஒரு நாள் செயலமர்வு கல்லடி கிரீன் கார்டன் ஹோட்டலில் நேற்று(18) நடைபெற்றது.
அதில் மாவட்ட செயலக, பிரதேச செயலக, பிரதேச சபை, நகர சபை, மாநகர சபையின் அரச உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

