கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் மாட்டிறைச்சியின் விலையில் மாற்றம் கொண்டு வரப்படுமெனவும் விலை குறைக்கப்படுமெனவும் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அண்மைய தினங்களாக ஓட்டமாவடி பிரதேச மாட்டிறைச்சி மற்றும் ஏனைய இறைச்சி வகைகளின் விலை தொடர்பில் பிரதேச மக்களாலும் சமூக ஆர்வலர்களாலும் நேரடியாகவும் சமூக ஊடகங்களிலும் பல்வேறு கோரிக்கைகளும் விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் தவிசாளரைத்தொடர்பு கொண்டு கேட்ட போதே மேற்படி வாகுறுதியை வழங்கினார்.
அண்மைய தினங்களாக ஓட்டமாவடி பிரதேச மாட்டிறைச்சி மற்றும் ஏனைய இறைச்சி வகைகளின் விலை தொடர்பில் பிரதேச மக்களாலும் சமூக ஆர்வலர்களாலும் நேரடியாகவும் சமூக ஊடகங்களிலும் பல்வேறு கோரிக்கைகளும் விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் தொடராக அவதானித்து வருகின்றேன்.
இது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எட்டும் நோக்கில் ஓரிரு தினங்களுக்குள் பிரதேச மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்கள், மாட்டு வியாபாரிகள் மற்றும் ஏனைய இறைச்சிக்கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடி நுகர்வோரும் இறைச்சிக்கடை உரிமையாளர்கள், விற்பனையாளர்களும் பாதிக்கப்படாத வகையில் விரைவில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளேன்.
ஏனைய பிரதேச இறைச்சி விலைகளுடன் எமது பிரதேச இறைச்சி விலைகளை ஒப்பிட்டு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் ஆராய்ந்து அதற்கான தீர்வையும் காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நாம் கடமைப்பொறுப்பேற்றது முதல் பிரதேச மக்களின் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி, அவர்களின் நன்மைகளை முன்னிறுத்தியே சபை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றேன். அதனடிப்படையில் விரைவில் இதற்கான தீர்வினையும் பெற்றுத்தருவேன் என தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், விலை குறைப்பு விடயத்தில் மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்கள், மாட்டு வியாபாரிகள் மற்றும் ஏனைய இறைச்சிக்கடை உரிமையாளர்களும் தவிசாளரின் முன்னெடுப்புக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டும்.

