கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி, தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான மலையாள படம் ‘துடரும்’. இத்திரைப்படம், இந்திய மதிப்பில் சுமார் 170 கோடி வசூலைப் பெற்று சாதனைப்படைத்துள்ளது. இப்படத்தின் வெற்றியால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.
இந்நிலையில் இப்படம் நாளை முதல் தமிழிலும் வெளியாகிறது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், விளம்பரப்படுத்துதலும் இல்லாமல் வெளியான துடரும், முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன், வசூல் வேட்டையை ஆரம்பித்தது. தற்போது வரை கேரளாவில் மட்டும் ரூ.85 கோடி வசூலைத் தாண்டியிருக்கிறது.
அதேசமயம், கேரளாவில் அதிக வசூல் செய்த படங்களில் 8ஆவது இடத்திலிருந்த ‘பிரேமலு’ படத்தின் சாதனையை முறியடித்து, அந்த இடத்தைப் பிடித்திருக்கின்றது துடரும் படம்.
மேலும் ஆந்திரா, தெலுங்கானாவில் தொடர்ச்சியாக 11 நாட்களில் ரூ.5 கோடி வசூலை கடந்திருக்கும் நிலையில், வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. மொத்தமாக உலகம் முழுவதும் ரூ.170 கோடி வசூல் செய்துள்ளது.