வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் தமது உறவுகளை தேடி ஆரம்பித்த போராட்டம் 09வது ஆண்டு இன்று நிறைவடைகின்ற நிலையில் தமது உறவுகளுக்கு நீதி வேண்டி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
கிளிநொச்சி நகர் சித்தி விநாயகர் ஆலயம் முன்பாக காலை 10.30மணிக்கு ஆம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் பேரணியாக சென்று டிப்போ சந்தி மீனாட்சி அம்மன் ஆலயம் முன்பாக நிறைவடைந்தது.
2017ம் ஆண்டு 02ம் மாதம் 20ம் திகதி கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தமது உறவுகளைத்தேடி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இன்று 3287 நாட்கள் நிறைவடைந்துள்ளது.

