மனைவியின் கழுத்தை அறுத்து கொலை; கணவர் பொலிஸில் சரண்

காலி – நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று(20) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

 

32 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயான மஹாபடகே இரேஷா மதுமாலி என்பவரே உயிரிழந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒருவருடன் தகாத தொடர்பு வைத்திருந்தமை காரணமாக கொலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

குடும்ப தகராறு காரணமாக கணவர் இந்தக் கொலையைச் செய்ததாகவும், தனது மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை, குறித்த பெண்ணுடன் தகாத தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டு முற்றத்தில் வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *