ஜேர்மனின் ஆளும் கட்சியான கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன், 14 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யவும், பதின்ம வயதினருக்கான டிஜிட்டல் சரிபார்ப்பு முறைகளைத் தீவிரப்படுத்தவும் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது.
இந்த விதிமுறைகளைச் செயல்படுத்தத் தவறும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும், ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் ஒரே மாதிரியான வயது வரம்பைக் கொண்டு வரவும் இந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

