வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் நேற்று(22) இடம்பெற்றது.
ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான உள்ளக பொறிமுறைகளை நிராகரித்தலும் வெளியக பொறி முறைகளை உருவாக்குவதற்கான மூல தத்துவங்கள் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்றது.
ஈழத் தமிழர்கள் உரிமைகள் பெருமன்றின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
ஈழத் தமிழர்கள் உரிமைகள் தொடர்பில் 12 பக்க முன்வரைவு பெப்ரவரி நான்காம் திகதி திருகோணமலையில் வெளியிடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் சர்வமத தலைவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அரியநேந்திரன், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், ஈழத் தமிழர்கள் உரிமைகள் பெருமன்றின் தமிழ் தேசத்திற்கான இணைப்பாளர் ஞானேஸ்வரன் மற்றும் ஈழத் தமிழர்கள் உரிமைகள் பெருமன்றின் மட்டக்களப்பு மாவட்ட பேராளர் ஜீவரெட்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


