சுடலைபிட்டி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அநாகரிக செயல்; ஆலய தொண்டர்கள் கண்டனம்

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் தெற்கு சுடலைபிட்டி பிள்ளையார் கோவில் ஆலய வளாகத்தில் அப் பகுதியில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் தொழிலாளர்கள் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஆலயத்தின் புனித தன்மையை மதிக்காமல் போதைப்பொருள் பாவனைகளில் ஈடுபடுதல், தமது மீன் பிடி உபகரணங்களை ஆலயத்தில் உட்புகுத்தி வைத்தல் மற்றும் தமது வாகனங்கள் ஆலய வளாகத்தில் நிறுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் மற்றும் ஆலய புனித பூமியை அசிங்கப்படுத்தும் நபர்களுக்கு எதிராக ஆலய தொண்டர்கள் வன்மையாக கண்டனங்களை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *