நாகர்கோவில் வடக்கில் கேரள கஞ்சாவுடன் நெல்லியடி விசேட அதிரடிப் படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் வடக்கு பகுதியில் இன்று(23) கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
நெல்லியடி விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலை நாகர்கோவில் வடக்கு பகுதியில் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது
இதன் போது 1கிலோ கிராம் 750 கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கேரள கஞ்சாவுடன் மருதங்கேணி பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

