கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக சுழியோடி, கடல் அட்டை பிடியில் ஈடுபட்ட 10 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, ஆயிரத்து 232 கடல் அட்டைகளும், மூன்று டிங்கி படகுகளும், சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
பள்ளிமுனை மற்றும் மன்னார் பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
