காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் பிரஜா சக்தி சமூக அபிவிருத்திச் சபை உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(24) காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கால் நடை, காணி விவசாய அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திலகநாதன், காத்தான்குடி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர் அஷ்ஷேய்க் பிர்தெளஸ் (நளீமி), கிழக்குமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் அப்துல்லாஹ், சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் இணைப்பாளர் வானி, உதவி பிரதேச செயலாளர் சில்மியா, பிரதேச செயலக உதவி பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தனூஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் 18 கிராம சேவகர் பிரிவின் 360 பிரஜா சக்தி சமூக அபிவிருத்தி சபை உறுப்பினர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டதுடன் காத்தான்குடி பிரஜா சக்தி தவிசாளர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

