இராணுவத்தினரின் உணவகங்களில் பொதுமக்களுக்கு வியாபாரம் செய்யத் தடை

இன்று(24) பருத்தித்துறை பிரதேச சபையின் 10 ஆவது அமர்வு பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் இடம்பெற்றது.
இவ் அமர்வில் பருத்தித்துறை பிரதேச சபையின் 9 ம் வட்டார உறுப்பினர் குறிஞ்சி குமரன் என்பவரால் பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இராணுவ உணவகங்களில் பொது மக்களுக்கு வியாபாரம் செய்வது முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என ஓர் பிரேரணை கொண்டு வரப்பட்டது.
இப் பிரேரணை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நான்கு பேர் உட்பட சபை அமர்வில் பங்கு கொண்ட அனைத்து உறுப்பினர்களாலும் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *