முள்ளியவளை பகுதியில் பட்டப்பகலில் துவிச்சக்கர வண்டி திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தனியார் கல்வி நிலையத்திற்கு கல்வி பயில வந்த மாணவர்கள் வீதி ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்த துவிச்சக்கர வண்டி ஒன்றை, இளைஞன் ஒருவர் துணிச்சலுடன் திருடிச் செல்லும் காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இளைஞனின் உருவம் காணொளியில் தெளிவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவரை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த நபரை அடையாளம் காணக் கூடிய தகவல்கள் இருப்பின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

