வவுணதீவில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரிப்பு

வவுணதீவு, வலையறவு பாலத்தருகில் உள்ள வயல் பகுதிக்குள் ஏழு காட்டு யானைகள் நேற்றிரவு உள்நுழைந்துள்ளன.

மட்டக்களப்பில் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக காட்டு யானைக்கூட்டம் வவுணதீவு, பகுதியில் நிலை கொண்டுள்ளன.

தாண்டியடி, கன்னங்குடா மற்றும் திருப்பெருந்துறை பகுதிகளிற்குள்ளும் நேற்றிரவு காட்டு யானைகள் உட்புகுந்ததனால் அப்பகுதியில் பாதுகாப்பற்ற நிலை காணப்பட்டது.

கடந்த மூன்று நாட்களாக குறித்த பகுதிகளுக்குள் யானைகள் நுழைவது அதிகரித்துள்ளது.

இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதோடு காட்டு யானைகளை நிரந்தரமாக காட்டுப் பகுதிக்குள் அனுப்பித்தருமாறும் அரசாங்கத்திடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *