கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மலையாளபுரம் சமுர்த்தி வங்கிக்கான புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று(25) நடைபெற்றது.
கடற்தொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கலந்து கொண்டு புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
மலையாளபுரம் மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், சமுர்த்தி பயனாளிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கும் இந்த புதிய கட்டிடம் முக்கிய பங்காற்றவுள்ளது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் மோகனபவன், கரைச்சி பிரதேச செயலாளர் முகுந்தன், மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர் கருணாநிதி, மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன், மாவட்ட ஒருங்கிணைப்பு இணைப்பாளர் மோகன், கரைச்சி பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் சிவகுமார், மலையாளபுரம் சமுர்த்தி முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அலுவலர்கள், கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த புதிய கட்டிடம் மலையாளபுரம் பகுதி மக்களுக்கு மேலும் விரைவான, திறமையான மற்றும் நவீன சேவைகளை வழங்கும் புதிய அடித்தளமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

