ஓமந்தையில் விபத்து; இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா ஓமந்தையில் இன்று(27) இடம்பெற்ற விபத்து காரணமாக இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
லொறி ஒன்றும் கென்டெர் வாகனம் ஒன்றும் மோதி இந்த விபத்து நடந்துள்ளது.
குறித்த விபத்து காரணமாக மூன்று மணிநேரம் ஏ9 வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *