அச்சுவேலியில் மாடுகளை கடத்திய ஒருவர் பொலிஸாரால் கைது

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரவாணி பகுதியில் மாடுகளை கடத்திய ஒருவர் பொலிஸாரால் இன்று(27) கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக மாடுகள் திருடப்பட்டு வந்த நிலையில், இன்று சிறிய ரக வாகனம் ஒன்றில் ஒன்பது மாடுகளை கடத்திச் சென்ற வேளை, காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காங்கேசன்துறை குற்றத் தடுப்புப் பிரிவினரால் மாடுகளை கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர் மாடுகளுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபர் நாளை(28) மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *