கல்முனை பிரதேச சுவாட் காரியாலயத்தில் இன்று(27) சுவாட் அங்கத்தவர்கள் 8 பேருக்கு 1,750,000.00 தொகை பெறுமதியான காசோலைகள் சுயதொழில் கடனாக வழங்கி வைக்கப்பட்டன.
இதில் அங்கத்தவர்கள் இணைந்து கடன்பெறும்நபர் என 16 பேர் கலந்து கொண்டனர்.
இதன் போது பிரமுகராக ஒரு தேசத்தின் சிறுவர் அறக்கட்டளை உலகளாவிய அமைப்பின் அம்பாறை மாவட்ட தலைவி நந்தினி விமலாதித்தன் கலந்து கொண்டு பெண்தலைமைத்துவம் தொடர்பாகவும், சுயதொழில் முயற்சிகள் குறித்தும், வரவு செலவு கணக்கு வைப்பது குறித்தும் தெளிவூட்டியதோடு கடனுக்கான காசோலைகளையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வினை கல்முனை பிரதேச முகாமையாளர் ஷலோமி பிரதீஸ் ஒழுங்கமைப்புச் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

