அக்கரைப்பற்றில் யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்தி 46 வயதுடைய ஆண் கைது

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் யுவதி ஒருவரைத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 46 வயதுடைய நபர் ஒருவரை நேற்று(27) அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது,

குறித்த பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த யுவதி ஒருவரை அந்த பகுதியைச் சேர்ந்த திருமணம் முடிக்காத 46 வயதுடைய ஆண் ஒருவர் தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து குறித்த நபரை சம்பவதினமான நேற்று கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் அந்த பகுதியில் நீண்ட காலமாக இவ்வாறு பல பெண்களுக்கு வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *