ஜம்மு – காஷ்மீரில் ஆயுததாரிகளின் ஊடுருவல் முறியடிப்பு

ஜம்மு – காஷ்மீரில் ஆயுததாரிகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டதாக  இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக நேற்று(08) இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள இராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பல்வேறு ரேடார்களையும், வான் பாதுகாப்பு அமைப்புகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு தகா்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *