கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் வட்டார எல்லைகளின் எல்லை நிர்ணயத்தை அடையாளப்படுத்தும் முகமாக வட்டாரத்தின் பெயர் பொறித்த ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கையை பிரதேச சபையின் நிர்வாகம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பிரதேச மக்கள் இச் செயற்பாட்டில் விழிப்பாக இருக்க வேண்டும் என கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தனபாலசிங்கம் நிர்மலன் இன்று இடம்பெற்ற ஊடாக சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.
கறுவாக்கேணியில் உள்ள தமது அரசியல் பணிமனையில் இவ் ஊடாக சந்திப்பு இடம்பெற்றது.
அவர் ஊடகங்களுக்கு
குறித்த விடயம் தொடர்பாக தெரிவிக்கையில்….
கோறளைப்பற்று பிரதேச சபையின் வருமானத்தை மேலும் அதிகரிக்கும் முகமாக கோறளைப்பற்று பிரதேச சபையின் சகல வட்டாரங்களையும் மையப் படுத்திய எல்லைகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பாக கடந்த சபை அமர்வில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும்
இவ் நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதில் நிர்வாக சிக்கல் நிலை உள்ளதாகவும் பிரதேசத்தின் சில வட்டாரங்களுக்கு குறித்த விடயம் பொருத்தமற்றது எனவும் தெரிவித்தார்..
குறித்த விடயத்திற்கு சபையில் தமது எதிர்ப்பை தெரிவித்த போதிலும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்று கூறினார்.
இவ் நடவடிக்கையானது தமிழரசு கட்சியானது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுடன் இணைந்து இவ் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கருத்து தெரிவித்தார்.
இதே போன்று வாகரை பிரதேசத்தில் காரமுனை கிராமம் தொடர்பான போலி ஆதாரங்களை கூறி குழப்பம் விளைவித்து வருகிறார்.
இவ்வாறான செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக மேலும் தமது கருத்துக்களை முன்வைத்தார்.

