ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற புதிய கட்டடம் மக்கள் பாவனைக்கு திறப்பு

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அருட்திரு பங்காரு அடிகளாரது 86 ஆவது அவதார பெருமங்கல விழாவினை முன்னிட்டு மட்டக்களப்பு களுவன்கேணி வீதி வந்தாறுமூலையில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றமும் ஆதிபராசக்தி அறநெறி பாடசாலையும் அமைந்துள்ள புதிய கட்டடம் மக்கள் பாவனைக்கு வைபவரீதியாக இன்று(03) திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ . சிறிநாத் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆதிபராசக்தி அறநெறி பாடசாலை மற்றும் வார வழிபாட்டு மன்ற நிறுவனர் சக்தி சுவிஸ் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.ஏறாவூர் பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஆதிபராசக்திக்கு விசேட பூசைகள் நடைபெற்றது டன் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தன.மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.ஆத்துடன் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வினை மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக நலம் பண்பாடு அறப்பணி மையம் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்கான நிதி அனுசரணை லண்டன் ஈஸ்ஹாம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக நலம் பண்பாடு வார வழிபாட்டு மன்றம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *