ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் ரிவர் பாக்கில் இப்தார் நிகழ்வு

ஓட்டமாவடி பிரதேச செயலகம் வருடாந்தம் நடாத்தும் “இப்தார்” நிகழ்வு பிரதேச செயலாளர் தாஹிரின் தலைமையில் ஓட்டமாவடி பாலத்திற்கருகாமையில் ரிவர் பாக்கில் நேற்று(03) மாலை இடம்பெற்றது.
இப்தார் நிகழ்வில் நோன்பின் முக்கியத்துவம் தொடர்பாக பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் பீர்முஹம்மது நடாத்தினார்.
இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஹலால்தீன், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் முபாறக், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் பாறூக், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் றியாஸ், கணக்காளர் சஜ்ஜாத் அஹமட், பிரதேச சபை உறுப்பினர்கள், வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வாழைச்சேனை விஷேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி, பிரஜா சக்தி தவிசாளர்கள், சமுக செயற்பாட்டாளர்கள், பிரதேச செயலகள் உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *