அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன் ஓரங்கமாக. ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வுகள் பிரதேச செயலாளர் தாஹிரின் தலைமையில் ஓட்டமாவடி பாலத்திற்கருகாமையில் ரிவர் பாக்கில் நேற்று(03) மாலை இடம்பெற்றது.
இதன் போது “விற்கின்ற-அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்”- அகன்று செல்” எனும் வாசகத்தினை மையமாகக்கொண்டு துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டிகளில் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.
இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஹலால்தீன், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் முபாறக், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் .பாறூக், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் றியாஸ், கணக்காளர் சஜ்ஜாத், பிரதேச சபை உறுப்பினர்கள், வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வாழைச்சேனை விஷேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி, பிரஜா சக்தி தவிசாளர்கள் மற்றும் பிரதேச செயலக போதையொழிப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்
மார்ச் மாதம் 01 முதல் “முழு நாடும் ஒன்றாக, தேசிய செயல்” திட்டத்துடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப்பிரசுரங்களும், சுவரொட்டிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

