‘திரிபோஷ’ உற்பத்திக்குத் தேவையான 15,000 மெட்ரிக் தொன் சோளம் கொள்வனவு

ஸ்ரீலங்கா திரிபோஷ லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான தரமான சோளத்தை உள்ளூர் சந்தையில் போதுமான அளவு பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், 2026 ஆம் ஆண்டிற்கான திரிபோஷ உற்பத்தியைத் தடையின்றி முன்னெடுக்க 15,000 மெட்ரிக் தொன் சோளத்தை அவசரமாக இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விவசாயம் மற்றும் வர்த்தக அமைச்சுகள் இணைந்து சமர்ப்பித்த இந்த முன்மொழிவு மூலம், எவ்வித தாமதமும் இன்றி திரிபோஷ விநியோகம் உறுதிப்படுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *