முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கான செயலமர்வு

மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகளை விடுத்து நேர்மறையாக மாணவர்களினை எவ்வாறு வழிப்படுத்தல் தொடர்பாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கான செயலமர்வு இன்று(05) நடைபெற்றது.

குறித்த செயலமர்வு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கிளிநொச்சி மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் சத்தியஜீவிதா தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் வளவாளர்களாக உளநல மருத்துவர் சிவதாஸ், சட்டத்தரணி தற்பரன் மற்றும் தேசிய சிறுவர் அபிவிருத்தி அதிகார சபையின்  நிகழ்ச்சிப்பணிப்பாளர் ரோகன ரணசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *