போதைப் பொருள் தடுப்பு; மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு

தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு அறிவுப்பகிர்வு நிகழ்ச்சித்திட்டம்.
“முழு நாடும் ஒன்றாக” தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு உள்ளக கணக்காய்வாளர் குமுதினி நிரஞ்சனின் விளக்கவுரையுடன் ஆரம்பமாகியது.
நாடளாவிய ரீதியில் விஷ போதைப்பொருள் விற்பனை விநியோகத்தை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டில் அடிமையானவர்களை இப் பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கும் புனர்வாழ்விற்கான ஆற்றுப்படுத்தல் போன்ற பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒர் அங்கமாக மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.
இவ்விழிப்புணர்வு செயலமர்வில் வளவாளராக பொது சுகாதார பரிசோதகர் நிஷாந்தன் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *