ஏறாவூர் நகரசபையில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்டம்

ஏறாவூர் நகரசபையில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்டம்“  ஏறாவூர் நகரசபை தவிசாளர் நளீம் தலைமையில் நகர சபை மண்டபத்தில் இன்று(05) நடைபெற்றது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் முசம்மிலின் வழிகாட்டுதலின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் தினேஸி பங்கு பற்றுதலுடன் இடம் பெற்ற நிகழ்வில்
ஏறாவூர் நகரசபை உத்தியோகத்தர்களுக்கு “முழு நாடும் ஒன்றாக” செயற்திட்டம் தொடர்பான தெளிவூட்டல்கள் இதன் போது வழங்கப்பட்டன.

இதன் போது “விற்கின்ற – அடிமையான அனைவருக்குமான அறிவித்தல் – அகன்று செல்” என்ற வாசகத்தை மையமாகக் கொண்டு துண்டுப் பிரசுரங்கள் பல வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் பிரதி தவிசாளர் கஜேந்திரன், ஏறாவூர் நகர சபை செயலாளர் நியாஸ், நிர்வாக உத்தியோகத்தர், சுகாதார பரிசோதகர்கள், போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் மற்றும் நகர சபை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த தவிசாளர் மனிதனை ஒரு நடை பிணமாக மாற்றும் இப் போதைப்பொருளை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வதுடன் இவ்வாறான  செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு பாரிய தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *