பிரதேச செயலாளர் திருச்செல்வம் தலைமையில், பிரதேச செயலக போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் புவினராஜ் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் போது, “விற்கின்ற – அடிமையான அனைவருக்குமான அறிவித்தல் – அகன்று செல்” என்ற வாசகத்தை மையமாகக் கொண்டு உளவளத்துணை விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் யூடி ரமேஷ் ஜெயக்குமார் வளவாளராக கலந்து கொண்டு குறித்த திட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பாக தெளிவூட்டல்களை வழங்கினார்.
மார்ச் 01 முதல் “முழு நாடும் ஒன்றாக – தேசிய செயல் திட்டம்” உடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு வாரத்தில், சமூகமட்டத்தில் கடமைபுரியும் அரச உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் என்பனவும் இதன்போது வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

