ஈரானுக்கு சார்பாக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது

ஈரானுக்கு சார்பாக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு பேரை பிரித்தானிய காவல்துறை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஈரானியர் என்றும், மற்ற மூவர் பிரித்தானிய – ஈரானிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு லண்டன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 22, 40, 52 மற்றும் 55 வயதுடைய இந்த நான்கு நபர்களும் கைது செய்யப்பட்டதாக அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *