பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் மாதிரி பாலர் பாடசாலைக்கு அடிக்கல் நடல்

பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் மாதிரி பாலர் பாடசாலையின் அடிக்கல் வைக்கும் நிகழ்வானது பட்டிப்பளை பிரதேச செயலாளர் சுதாகரன் தலைமையில் இடம்பெற்றது.

கேமாஸ் நிறுவனத்தின் அனுசரனையின் கீழ் நிர்மாணிக்கப்படும் மாதிரி பாலர் பாடசாலையின் அடிக்கல் நாட்டு வைபவம் கெவிளியாமடு பிரதேசத்தில் இடம்பெற்றது.

கேமாஸ் நிறுவனத்தினரினால் மாவட்டத்தில் இரண்டாவது சிறுவர்நேய முன்பள்ளி பாலர் பாடசாலை நிர்மாணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பட்டிப்பளை உதவி பிரதேச செயலாளர், மாவட்ட முன்பிள்ளைப்பரு்வ அபிவிருத்தி் இணைப்பாளர், பிரதேச முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், மத குருமார் மற்றும் பாலர்பாடசாலை சமூகம் எனப் பலரும் கலந்து கொன்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *