பதுளை – பசறை பிரதான வீதியின் 7ஆம் கட்டை பகுதியில் இன்று(07) அதிகாலை அரிசி ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பசறையிலிருந்து பதுளை நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற லொறி ஒன்றே இவ்வாறு கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியுள்ளது.
இந்த விபத்தினால் வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த 5 தொலைத்தொடர்பு (Telecom) கம்பங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

