காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கிடையேயான பயணிகள் படகுச்சேவை மீண்டும் ஆரம்பம்

பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக  இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கிடையேயான பயணிகள் படகுச்சேவை நேற்று(06) முதல் மீண்டும் ஆரம்பமானது.

தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து 77 பயணிகளுடன் புறப்பட்ட சிவகங்கை பயணிகள் படகானது காங்கேசன்துறையை வந்தடைந்து. மீண்டும் 92 பயணிகளுடன் நாகப்பட்டினம் நோக்கி பயணித்தது.

கடந்த ஒக்ரோபர் மாதம் 28 ஆம் திகதி பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த  சிவகங்கை பயணிகள் படகானது சுமார் நான்கு மாதங்களின் பின்னர் சேவையினை இன்று ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

வாரத்தில் செவ்வாய் தவிர்ந்த 6 நாட்களும் சேவை இடம்பெறும் இரு வழிக்கட்டணமாக 28500 இலங்கை ரூபாய்கள் அறவிடப்படுகின்றது.

வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்களுக்கு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதனை உறுதிப்படுத்துவது வைத்தியசாலை நிர்வாகத்தின் பொறுப்பாகும். பிரேத அறையானது கட்டாயமாகப் பூட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இச்சம்பவத்தின் போது அது பூட்டப்பட்டிருந்ததா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அத்துடன், சடலங்கள் முறையாகக் குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கு அதுவும் இடம்பெறவில்லை. இவ்வாறான குறைபாடுகள் குறித்து ஏற்கனவே உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளோம்.

சம்பவம் நடந்த இரவு வேளையில் பிணவறைக்குள் நுழைந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள மூன்று ஊழியர்கள் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அறிவியல் ரீதியான மற்றும் பொலிஸ் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வைத்தியசாலைக் கட்டமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைய விடமாட்டோம். குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தராதரம் பாராது கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *