வரலாற்று சிறப்பு மிக்க பொங்கல் விழா இன்று(07) கோவில்போரதீவு உதயதாரகை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
அகில இலங்கை முன் பள்ளி ஆசிரிய சங்கமும் மட்டக்களப்பு கிளை போரதீவுப்பற்று பிரதேச முன் பள்ளி ஆசிரியர்களும் இணைந்து இவ் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
48 பொங்கல் பானை வைத்து 120 முன் பள்ளி ஆசிரியர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
மரபு ரீதியாக வயலில் அறுவடை செய்த நெற்கதிரை மகளீர் இணைந்து கையால் குத்தி புத்தரிசியாக்கி புதுப்பாணையில் இட்டு பொங்கல் இட்டு மகிழ்ந்தனர்.
முன்பள்ளி மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தன. அறிஞர்கள் பலர் சிறப்புரையாற்றினார்கள்.
அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் மதிமேனன், உதவி பிரதேச செயலாளர் கமல்ராஜ், ஆலய குரு சுபா வாலமுரளி, முன்பள்ளி டிப்ளோமா முன்னாள் இணைப்பாளர் மெய்யியல் துறை தலைவர் அழகரெத்தினம், பிரதேச சபை உறுப்பினர் கோபிநாத், விபுலானந்த அழகியல் துறை பேராசிரியர் சிவரெத்தினம், முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் அருந்ததி, கலாசார உத்தியோகத்தர் பிரபாகரன், கோவில் போரதீவு விவேகானந்தர் பாடசாலை அதிபர் உலகேஸ்வரன், யாழ் மாவட்ட கிளிநொச்சி அறிவிப்பாளர் வேதவனம், கிளிநொச்சி மாவட்ட சிகரம் இலவசக் கல்வி நிலைய நிர்வாகி செல்வகலா, இலங்கை பட்டாதாரி ஒன்றிய தலைவர் அனிதன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பாஸ்கரன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


