ஜனாதிபதி தற்போதுள்ள அரசாங்கம் பெண்களுக்கு வேண்டிய சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தி அவர்களுக்கான சந்தர்ப்பத்தை வழங்கி வருகின்றனர் என மாவட்ட பெண்களுக்கான வர்த்தக பொருளாதார சம்மேளனதின் தலைவி வாசுகி சுரேஷ் தெரிவித்தார்.
நாட்டின் பிரதமர் ஒரு பெண்ணாக இருப்பதாலும் அரசாங்கம் பெண் முயற்சியாளர்களை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
நாட்டின் ஜனாதிபதி அண்மையில் மலையக பெண் தோட்டத் தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் குறை நிறைகளை கேட்டமையானது மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இருப்பினும் கிழக்கு மாகாண பெண் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு வேண்டிய சர்வதேச சந்தை வாய்ப்பினை அரசாங்கம் தமக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் அதேவேளை அரசாங்கம் வழங்குகின்ற சலுகைகள் உரியவர்களுக்கு சென்றடைகின்றதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண பெண்கள் சார்பில் இவர் கோரிக்கை முன்வைக்கின்றார்.
சர்வதேச பெண்கள் தினத்தில் நாம் பெண்களின் உரிமைகள் திறமைகள் பாதுகாப்பு என பலதரப்பட்ட விடயங்களை பார்க்கும்போது இன்றும் ஆண்களுக்கு சவாலாக பெண்கள் தமது திறமைகளை பதிவிட்டு வருவதை சமூகத்தில் காணக் கூடியதாக உள்ளது.
கிழக்கு மாகாணத்திலே இன நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக காணப்படும் பிரதேசங்களில் மட்டக்களப்பு ஆரையம்பதி ஒன்றாகும். இங்கு கலை கலாசாரம் வீரம் என பல துறைகளில் பெண்கள் கடந்த காலங்களில் பேசும் பொருளாக காணப்பட்டுள்ளனர்.
பொறியியல் பீடத்தில் கற்கைகளை மேற்கொண்ட போதும் தான் சுயதொழில் மூலம் ஒரு பெண் முயற்சியாளராக தமது உற்பத்திப் பொருட்களுக்கு வேண்டிய சர்வதேச சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் அளவுக்கு இன்று முன்னேறி தனது திறமைகளை வளர்த்து வருகின்றார்.
கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சிறிய அளவில் 11உற்பத்தி பொருட்கள் உடன் ஆரம்பித்த இவரது பயணம் இன்று 20க்கு மேற்பட்ட அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்து பெண் முயற்சியாளர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகின்றார்.
ஆரம்பத்தில் இவர் இன நல்லினக்கத்துடன் வீட்டுத் பூந்தோட்டம் மற்றும் சிறிய உணவு உற்பத்தி பொருட்களுடன் ஆரம்பித்து மாவட்ட மட்டத்தில் பல விருதுகளை பெற்றதுடன் தனது திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் தவறவில்லை.
இன்று உளுந்து மா ரசப்பொடி சுக்குமல்லி கோபி மிளகாய் தூள் அரிசி மா என 20க்கு மேற்பட்ட நஞ்சற்ற பொருட்களை உற்பத்தி செய்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்து இடம்பெறும் முக்கிய கண்காட்சிகளில் தனது பங்கினை ஆற்றி வருகின்றார்.
இருப்பினும் தற்போதுள்ள அரசாங்கம் வறுமை ஒழிக்க அழகான நாடு வளமான தேசம் பிரஜா சக்தி திட்டத்தின் ஊடாக பெண் முயற்சியாளருக்கு வேண்டிய திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் தமது உற்பத்தி பொருட்களுக்கு வேண்டிய சர்வதேச சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இத்தினத்தில் இவர் கோரிக்கை விடுக்கின்றார்.

