சுதந்திரப் பறவைகள்” மகளிர் பேரவை நடாத்தும் பன்னாட்டு மகளீர் தின நிகழ்வு இன்று(08) கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது சுதந்திரப்பறவைகள் மகளீர் பேரவையின் தலைவி கணேஸ்குமார் கிறேஸ் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சைவமங்கையர் கழகத்தை சேர்ந்த ஓய்வு நிலை ஆசிரியர் சோமசேகரம்பிள்ளை செல்வராணி, கரைச்சி வட்டக்கச்சி பிறப்பு, இறப்பு பதிவாளர் கிருஸ்ணராசா தயாநிதி, பூநகரி பிரதேச சபை உப தவிசாளர் குலவீரசிங்கம் குணலட்சுமி, பால்நிலை சமத்துவம் தொடர்பான வளவாளர் விநாயகமூர்த்தி கமலினி, பூநகரி மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நிஷாந்தன் விவேகி மற்றும் பளை மத்திய கல்லூரி அபிவிருத்தி உத்தியோகத்தர் பரணிதரன் சரண்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

