மட்டக்களப்பு கிரான் அன்னை ஸ்ரீ சாரதா தேவி அறநெறி பாடசாலையின் பொங்கல் விழாவும் கலை நிகழ்வும் கிரான் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
மாணவர்களிடயே தமிழர் பண்பாடு மற்றும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் பண்பினை சிறு பராயம் முதல் அறிமுகம் செய்யும் வகையில் இந் நிகழ்வு
கிரான் இந்து சமய வளர்ச்சி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
கிரான் அன்னை ஸ்ரீ சாரதா தேவி அறநெறி பாடசாலையின் அதிபர் கிரிஜா கோசசி தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் அதிதிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் பொங்கல் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமாகின.
இந்நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தன.
நிகழ்வின் இறுதியில் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுப்பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அதிதிகளாக கிரான் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களான சிவராம், தேவஅதிரன், கலைவாணி, கிராம சேவகர் உமாவிஜிதா, ஆலய மத குருமார்கள், பிரதேச ஆலய தலைவர்கள் மற்றும் பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


