திருகோணமலை, உவர்மலை லோவர் வீதியில் அமைந்துள்ள சித்ரவேல் சுதாகரன் என்பவரது வீட்டைப் பழுதுபார்க்கும் பணிகள் நேற்று(07) நடைபெற்றுள்ளன.
இதன்போது, வீட்டின் கூரைப்பகுதியில் இரண்டு கைக்குண்டுகள் இருப்பதை உரிமையாளர் அவதானித்துள்ளார்.
இது குறித்து உடனடியாக திருகோணமலை தலைமையக பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 02 கைக்குண்டுகளை மீட்டனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில், மீட்கப்பட்ட குண்டுகள் நேற்று மாலை கன்னியா பகுதியில் பாதுகாப்பாகச் செயலிழக்கச் செய்யப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

