புனித ரமழான் மாதத்தின் கருணை, பகிர்வு மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று(09) கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
மேலும் அதிதிகளாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி, சமூக சேவை உத்தியோகத்தர் ஜெய்ஸான், கல்முனை உலமா சபை தலைவர் முர்ஷித் மௌலவி, பொப் இன் டேஸ்ட் நிறுவனத்தின் உரிமையாளர் அன்வர், ரஹ்மத் பவுண்டேசனின் உயர்பீட உறுப்பினர்கள், சமூக முக்கியஸ்தர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

