2026ஆம் ஆண்டு முதலாம் காலாண்டுக்கான பூநகரி பிரதேச விவசாயக்குழுக் கூட்டம் இன்று(10) பூநகரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பூநகரி பிரதேச செயலாளர் ஆயகுலன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர், பூநகரி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள அலுவலர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், பிரதேச செயலக அலுவலர்கள் மற்றும் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது பூநகரி பிரதேசத்தில் காணப்படும் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட்டன.

