அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபம மங்கள விக்ரமாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்துகமவைச் சேர்ந்த இவர் சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா கல்லூரியின் பழைய மாணவராவார்.
மோட்டார் வாகனத் துறையின் ஆணையாளராகத் திறம்படச் செயலாற்றிய ஒரு சிறந்த நிர்வாகியான இவர், தற்போது அம்பாறை மாவட்டத்தின் அரசாங்க அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளளார்.
தங்களின் புதிய பதவிக்காலம் வெற்றிகரமாக அமையவும், பொதுமக்களுக்குச் சிறந்த சேவையாற்றவும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

