குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளை இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்க களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவித்துள்ளார்.
1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று(09) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக நீதவான் பிரதீபனால் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குருக்கள்மடம் மனிதப் புதைகுழி முதலாம் கட்ட அகழ்வுப்பணிகள் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இவ்வழக்கில் ஆஜரான சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவித்தார்.

